யாழ்ப்பாணத்தில் குளத்தில் தூண்டில் மூலம் மீன்பிடித்த வாலிபனுக்கு நேர்ந்த சோகம்



 யாழ்ப்பாணம் இளவாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டத்தரிப்பில் உள்ள குளம் ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கீரிமலை வீதி, விளான் கிராமத்தைச் சேர்ந்த வாமதேவன் கோகிலதேவ் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிர் நீத்தார்.

இது குறித்து மேலும் அறியப்படுவதாவது: மூன்று வாலிபர்கள் நேற்று மாலை குறிப்பிட்ட குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிக்கச் சென்றனர். அப்பொழுது குறிப்பிட்ட இளைஞர் தூண்டிலைக் குளத்தில் போட்டபோது தூண்டில் முழுமையாக குளத்தில் விழுந்தது.

தூண்டிலை மீட்கக் குளத்தில் இறங்கிய இளைஞன்:

இதன்போது குறிப்பிட்ட இளைஞர் தூண்டிலை எடுப்பதற்காகக் குளத்தில் நீச்சலிட்டு இறங்கியவேளை நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்றுவதற்கு சக நண்பர்கள் முயற்சித்தும் அது வெற்றிகரமாக அமையவில்லை.

இன்று காலை காங்கேசன்துறை (கே.கே.எஸ்) கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது குறிப்பிட்ட இளைஞர் உடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்:

அவரது உடலின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் நடாத்தினார். உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை