நாளை (10) முதல் பிரதான தடத்தில் சில அலுவலக சிறப்பு ரயில்களை வழமை போல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நிலவிய பருவநிலை சீர்குலைவு காரணமாக, அம்பேபுஸ்ஸ - அலவ்வ இடையே உள்ள புஜ்ஜொமுவ ரயில் நிலையம் அருகில் அமைந்திருந்த ரயில் பாதையின் கல்லால் ஆன குறுக்குப் பாலம், அருகில் ஓடும் மா ஓயா நோக்கி சரிந்து உடைந்தது.
இதன் காரணமாக ரயில் பாதையின் அடியில் சுமார் 45 அடி ஆழமான பெரும் பள்ளம் உருவாகியிருந்தது.
இதனால் பிரதான தடத்தில் ரயில் போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டதுடன், பிரதான, வடக்கு மற்றும் கிழக்கு தடங்களில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதன் விளைவாக, ரயில் போக்குவரத்து கொழும்பு கோட்டை முதல் அம்பேபுஸ்ஸ வரை மட்டுமே சுருக்கப்பட்டிருந்தது.
தன்னார்வப் பணியாளர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்புடன், அம்பேபுஸ்ஸ - அலவ்வ இடையே புஜ்ஜொமுவ ரயில் பாதையில் இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, இன்று ரயில் பாதை பழுதுபார்க்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கிறது.
இதன் அடிப்படையில், நாளை (10) காலை ரம்புக்கனை, பொல்கஹவல மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ள அலுவலகச் சிறப்பு ரயில்களின் சேவை அட்டவணையை ரயில்வே திணைக்களம் பின்வருமாறு வகுத்துள்ளது:
