கொட்டாஞ்சேனையில் கத்திக் குத்து: ஒருவர் மரணம்

 


கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கையில் இன்று (18) மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஓர் அங்காடிக் கடைக்கு முன்னால் நின்றிருந்த நபரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 53 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை