யாழ்ப்பாணத்தில் பழைய வீட்டினை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் மீது சுவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் முல்லைத்தீவு, விசுவமடுவைப் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சன் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்ப வறுமை காரணமாக டிலக்சன் வேலை தேடி வந்துள்ளார். நேற்றைய தினம் (2025.12.19) குருநகர் - பாஷையூர் பகுதியில் பழைய வீட்டினை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு பக்கச் சுவரை இடித்த பிறகு, அந்தச் சுவர் விழும் என எதிர்பார்த்து, டிலக்சன் அறையின் உள்ளே ஓடியுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில், மறுபுறம் இருந்த சுவர் எதிர்பாராதவிதமாக அவர் மீது விழுந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். உயிரிழந்த டிலக்சனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் அவர்கள் மேற்கொண்டார்.
