இந்திய கிரிக்கெட் அணி துடுப்பாட்ட வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் ராஜஸ்தான் - மும்பை அணிகளுக்கிடையிலான போட்டியின் பின்னர் அவருக்குத் திடீரென கடுமையான வயிற்றுப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது.
வலி அதிகமானதால், அவர் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததில், அவருக்குத் தீவிரமான இரைப்பை குடல் அழற்சி (Gastroenteritis) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
சிகிச்சைக்குப் பின்னர், அவர் தொடர்ந்து மருந்துகளை உட்கொண்டு முழு ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.