அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களின் முதியோர் உதவித்தொகை கொடுப்பனவு, இன்று (18) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரிச் சபை இதனை அறிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிக் குடும்பங்களில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவு வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
தகுதியுள்ள பயனாளிகள் நாளை (18) முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 616,346 முதியவர்கள் இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த முதியோர் நலன்புரித் திட்டத்திற்காக அரசாங்கம் ரூபா 3,081,730,000 (3 பில்லியனுக்கும் அதிகமானது) தொகையை ஒதுக்கியுள்ளது.