கடந்த 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏ35 பிரதான வீதியில், 11 ஆம் கட்டை (மைல்கல்) பகுதியில் அமைந்துள்ள முக்கிய பாலத்தில் பாரிய சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சேதமடைந்த அப்பாலத்தை புனரமைக்கும் வேலைகளில், இந்திய இராணுவத்தினரும், இலங்கை இராணுவத்தினரும், வீதி அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து அதிவிரைவாகச் செயல்பட்டனர்.
இதன் காரணமாக, இன்றைய தினம் (20) புனரமைப்புப் பணிகள் முற்றுப்பெற்றன. குறிப்பிட்ட இந்தப் பாலத்தின் புனரமைப்புப் பணிகளை இன்றைய தினம் இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி ஆய்வு செய்தார்.
இந்தப் பாலம், எதிர்வரும் 21 அல்லது 22 ஆம் திகதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்படவுள்ளது.
