எதிர்பாரா விபத்து: யாழ்ப்பாணத்தில் பவுசரில் சிக்கி குடும்பப் பெண் பலி

 


யாழ்ப்பாணம் - பொம்மைவெளிப் பகுதியில் இன்றைய தினம் (20) நடந்த வாகன விபத்து ஒன்றில் ஒரு குடும்பத் தலைவி உயிரிழந்துள்ளார். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது: மூளாய்ப் பகுதியினைச் சேர்ந்த தாயும் மகளும், மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர் திசையில் வந்த வேறொரு மோட்டார் சைக்கிள், முந்திச் செல்ல முயன்றபோது நிலைதடுமாறிய தாயும் மகளும், மோட்டார் சைக்கிளுடன் வீதியின் நடுவே விழுந்தனர்.

இந்தச் சமயத்தில், எதிர்ப்புறமாக வந்த யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான ஒரு கழிவு நீர் உறிஞ்சும் வண்டி (Gully Bowser), அந்தத் தாயின் தலையின் மீது ஏறியுள்ளது. இந்த விபத்தில், அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் உடல், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேல் விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை