மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை (19) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை (22) ஆகிய தினங்களில் விடுமுறை அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபாணி பியசேன அறிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவே இந்தத் தற்காலிக முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
