பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரூ.500 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் – 03 இந்தியப் பிரஜைகள் கைது

 


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சுமார் 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘குஷ்’ வகை போதைப்பொருட்களுடன் 03 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL 403 விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது, இவர்களிடம் இருந்து சுமார் 50 கிலோகிராம் நிறையுடைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

புதியது பழையவை