பிரித்தானியாவின் வேலை விசா (Work Visa) பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் தொடர்பான நிபந்தனைகள் இன்று முதல் அதிகாரபூர்வமாக உயர்த்தப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய குடிவரவு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, 2026 ஆம் ஆண்டில் இருந்து குடிவரவு விதிமுறைகளில் பல முக்கிய மாற்றங்கள் அமுலுக்கு வரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே வேலை விசா விண்ணப்பதாரர்களுக்கான ஆங்கில மொழித் திறன் தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பணியிடங்களில் திறமையான தொடர்பாடலை உறுதி செய்வதோடு, பிரித்தானிய சமூகத்தில் குடியேறுவோரின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே இந்த மாற்றத்தின் பிரதான நோக்கம் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய நிபந்தனைகள் எதிர்கால வேலை விசா விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால், விண்ணப்பதாரர்கள் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கவனமாக ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
