இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான உடன் செலாவணி வீதத்தின் நடுவீதம் ரூ. 310.02 ஆக பதிவாகியுள்ளது.
2024 பெப்ரவரி 29 ஆம் திகதிக்குப் பின்னர், டொலரின் சராசரி பெறுமதி 310 ரூபாய் எல்லையை மீறிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
மேலும், இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணை படி,
இன்று ஒரு அமெரிக்க டொலரின்
-
கொள்வனவு விலை – ரூ. 306.28
-
விற்பனை விலை – ரூ. 313.81
என்பதாக பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டில் இலங்கை ரூபா, அமெரிக்க டொலருக்கு எதிராக 5.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி முன்பே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
