போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: யாழ்ப்பாணத்தில் 10 பேர் சிக்கினர்

 


யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், 17 வயதுடைய ஒரு பாடசாலை மாணவர் உட்பட மொத்தம் 10 பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை நேற்று  (23) காலை இந்த சுற்றிவளைப்பு சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் போது, ஐஸ் போதைப் பொருளுடன் நால்வர், போதை மாத்திரைகளுடன் ஐவர் மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதியது பழையவை