இலங்கைக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், நேற்று (23) வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்கள், அத்துடன் மலையகத்தின் அரசியல் தலைவர்களையும் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்புகள் கொழும்பில் நடைபெற்றதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தனது 'X' (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.