கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மசாஜ் நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, மூன்று நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
