பொது அவசரகால நிலை நீடிப்பு புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

 

நாட்டில் நிலவும் பொது அவசரகால சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே அமலில் இருந்த அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதியின் செயலாளரால் இன்று (28.12.2025) குறித்த அதிவிசேட வர்த்தமானி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பை உறுதி செய்வது, நாட்டின் இயல்பு நிலையைப் பேணுவது மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த அவசரகால நிலைமை தொடரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை