சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற இரு நபர்களை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட இருவரும் இந்தியப் பிரஜைகள் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த நபர்கள், எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-654 ரக விமானத்தின் மூலம் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, அவர்கள் நேற்று மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.