சம்பூர் கடற்பரப்பில் இந்திய ரொக்கட்டின் பாகம்

 


திருகோணமலை மாவட்டம், சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில், ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இந்தியாவுக்குச் சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் ஒரு பாகம் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த ரொக்கட்டின் பாகங்கள் திருகோணமலை கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில், மாலை நேரத்தில் சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவ இடத்தில் இரு கடற்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பாகங்கள் விண்வெளிக்கு ஏவப்பட்ட ரொக்கட்டிலிருந்து மேலே செல்லும் போது கழன்று விழுந்த பகுதிகளாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

புதியது பழையவை