மியன்மாரில் இராணுவ கவிழ்ப்புக்குப் பிறகு நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு, ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மியன்மார் இராணுவம் கவிழ்த்ததைத் தொடர்ந்து, இத்தேர்தல் நடத்தப்படுகிறது.
மொத்தம் 330 நிர்வாகப் பிரிவுகளில், மூன்றில் ஒரு பகுதியிலேயே வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போர்ச் சூழ்நிலை காரணமாக பல பகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் அணுக முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு எதிர்வரும் ஜனவரி 11 மற்றும் 25 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பாதுகாப்பு காரணங்களால் 65 நிர்வாகப் பிரிவுகளில் வாக்குப்பதிவு இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
