மின்சாரம், எரிபொருள் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

 


மின்சாரம் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள் மற்றும் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல், 2025 டிசம்பர் 28 ஆம் திகதியிடப்பட்ட 2468/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,

  • வைத்தியசாலைகள், பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட இடங்களில் நோயாளர்களைப் பராமரித்தல், அனுமதித்தல், பாதுகாப்பு, உணவளித்தல் மற்றும் சிகிச்சை வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகள்,

  • நோயாளர் காவு வண்டி சேவைகள், பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்கான பொது போக்குவரத்து சேவைகள்,

  • நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புடன் தொடர்புடைய அனைத்து சேவைகள்,

  • உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் பாதுகாப்பு,

  • அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கள மட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் சேவைகள்,

  • இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள், காப்புறுதி சேவைகள்,

  • உள்ளூராட்சி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் நீர் வழங்கல், மின்சாரம், கழிவுநீர் அகற்றல், தீயணைப்பு, கழிவு சுத்திகரிப்பு மற்றும் குப்பை அகற்றல் சேவைகள்

புதியது பழையவை