கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்னாங்கண்டி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 131 கிலோ கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த நம்பகமான ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.