இலங்கைக்குக் கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது!

 


இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தை அடுத்த முள்ளிமுனை மீன்பிடித் துறைமுகப் பகுதியில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கஞ்சா மூட்டைகளை மரைன் (கடலோரப் பாதுகாப்புக் குழும) காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண மதிப்பு மற்றும் கடத்தல் அதிகரிப்பு

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் இந்தியச் சந்தை மதிப்பு சுமார் 25 இலட்சம் ரூபாய் எனவும், சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் எனவும் மரைன் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால், அண்மைக்காலமாக தனுஷ்கோடி கடல் வழியாகக் கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, சமையல் மஞ்சள் மற்றும் மெத்தாம்பேட்டமைன் போன்ற பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

 பொலிஸாரின் நடவடிக்கை

இந்நிலையில், ) இரவு முள்ளிமுனை கடற்கரையிலிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கஞ்சா கடத்தப்படவுள்ளதாக தேவிபட்டினம் மரைன் காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் முள்ளிமுனை முகத்துவாரக் கடற்கரைப் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரைக் கண்டதும் தப்பியோட முயன்ற இருவரைச் சுற்றிவளைத்துப் பிடித்த காவல்துறையினர், அப்பகுதியைச் சோதனையிட்டபோது, இலங்கைக்குக் கடத்துவதற்காக மூட்டைகளாகப் பொதி செய்யப்பட்டிருந்த கஞ்சா கண்டெடுக்கப்பட்டது.

தேவிபட்டினம் மரைன் காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு எடைபோடப்பட்டதில் சரியாக 150 கிலோ கஞ்சா இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்தக் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட முள்ளிமுனைப் பகுதியைச் சேர்ந்த இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை