அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் ஏற்பட்ட பாதிப்புகளினால், இலங்கை மின்சார சபைக்கு (CEB) 20,000 மில்லியன் ரூபாய் (ரூ. 20 பில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அத்துடன், தமது வீடுகளை இழந்த பல மின்சார நுகர்வோர் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட அனைத்து மின்மாற்றி (Transformer) அமைப்புகளும் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தடைப்பட்ட மின்சார விநியோகத்தில் 99 சதவீதம் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர், நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தப் பேரிடர் காரணமாக நாடு முழுவதும் 4.1 மில்லியன் மின்சாரத் தடைகள் ஏற்பட்டிருந்ததாகவும் நோயல் பிரியந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.