தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கிறது: அதிமுக 170, கூட்டணிக்கு 64 தொகுதிகள்



 தமிழகத்தில் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு குறித்து கலந்துரையாடுவதற்காக, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருகை தந்துள்ளார்.

சென்னையில் அவர், தி.நகரில் அமைந்துள்ள பாஜக மாநில அலுவலகத்தில், தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமைத்துடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த கலந்துரையாடல்களில், மொத்தம் 170 தொகுதிகளில் அதிமுக போட்டியிடவும், பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு 64 தொகுதிகளை வழங்கவும் முன்மொழிவுகள் இடம்பெற்றதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், அதிமுக–பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும், அமமுகவையும் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அதிமுக தரப்பு கூறியுள்ளது.

புதியது பழையவை