இலங்கை சுற்றுலாவில் புதிய சாதனை – 2025 இல் வரலாறு காணாதளவு உயர்ந்த பயணிகள் வருகை

 


இலங்கை சுற்றுலாத் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,333,797 ஆக உயர்ந்துள்ளது.

இந்த எண்ணிக்கை, 2018 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த 2,333,796 சுற்றுலாப் பயணிகள் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச வருடாந்திர சுற்றுலாப் பயணிகள் வருகையை பதிவு செய்த ஆண்டாக 2025 அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை