சீரற்ற வானிலை காரணமாக, காசா பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் பலஸ்தீனிய மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், தொடர்ச்சியான குண்டுவீச்சுகள், முற்றுகை நிலை மற்றும் பெரும் மனித இழப்புகள் காரணமாக ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தற்போது நிலவும் மோசமான வானிலை மேலும் ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது.
மேலும், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவி விநியோகங்களை இஸ்ரேல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக, பாதுகாப்பான வசிப்பிடங்கள் இன்றி கூடாரங்களில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள், மழை, குளிர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமை காரணமாக கடுமையான துயரத்தை அனுபவித்து வருகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
