புதிய அரசாங்கம் பல்கலைக்கழக சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ள முன்வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று (30) நாடளாவிய ரீதியில் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இ. சஸ்வேஸ்வரன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் குறிப்பிட்டதாவது, பல்கலைக்கழக பீடாதிபதிகளை தெரிவு செய்வதற்கான 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தில் உள்ள விதிகளை திருத்தாமல், அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், கல்வி அமைச்சு சட்டத்தின் 49 மற்றும் 51 ஆம் சரத்துக்களை மட்டுமே திருத்த உள்ளதாக அறிவித்திருந்த போதிலும், இந்த மாற்றங்கள் பல்கலைக்கழக நிர்வாக நடைமுறைகளில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும், பீடாதிபதிகளின் தெரிவில் முறைகேடுகள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.