2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் இரண்டு பௌர்ணமி தினங்கள் வருவதால், அவற்றில் எது உண்மையான வெசாக் தினமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவுபடுத்துமாறு பௌத்த மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய அரச நாட்காட்டியில் மே மாதம் 1 ஆம் திகதி வெசாக் தினமாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்த நாளில் வெசாக் பௌர்ணமிக்கான தேவையான நட்சத்திரப் பொருத்தம் இல்லை என மதத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, மே மாதம் 30 ஆம் திகதியை அதிகாரப்பூர்வ வெசாக் தினமாக அறிவிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அந்த நாளில் அனைத்து அரச விழாக்கள், சமய நிகழ்வுகள் மற்றும் தேசிய அளவிலான வெசாக் அனுஷ்டானங்களை நடத்துவதற்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.