ஆங்கிலப் புத்தாண்டு 2026-ஐ வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் உற்சாகமாக தயாராகியுள்ள நிலையில், பசிபிக் கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி தீவுகளில் முதன்முதலில் புத்தாண்டு பிறந்தது.
சூரியன் உலகில் முதலில் உதயமாகும் பகுதிகளில் ஒன்றான கிரிபாட்டியின் கிறிஸ்துமஸ் தீவில், புத்தாண்டு பிறந்தவுடன் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்திலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நள்ளிரவு நேரத்தில், நகர மையப் பகுதியில் வண்ணமயமான வானவேடிக்கைகள் ஒளி வெள்ளமாக பாய்ச்சின. நகர வீதிகளில் மக்கள் திரண்டு, இசை மற்றும் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுடன் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் நேர மண்டலங்களுக்கு ஏற்ப புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
