2026 ஆம் ஆண்டுக்கான அத்தியாவசிய மருந்துகள் – உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

 


2026 ஆம் ஆண்டில் நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை, உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.

இதற்காக விண்ணப்பித்திருந்த 48 நிறுவனங்களின் தகுதிகள் தொடர்பாக, உயர்மட்டக் குழு மேற்கொண்ட ஆய்வின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட ஏனைய உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து இந்த கொள்வனவுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், மருந்து விநியோகத்தில் நிலைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

புதியது பழையவை