மரத்தில் மோதி உந்துருளி விபத்து: 22 வயது இளைஞன் பலி

 


பலாங்கொடை – இரத்தினபுரி பிரதான வீதியில் ஏற்பட்ட உந்துருளி விபத்தில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை நோக்கி சென்று கொண்டிருந்த உந்துருளி ஒன்று, ஓப்பநாயக்க காவல் நிலையத்திற்கு அண்மையில் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி, அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் கடுமையான காயங்களை சந்தித்த உந்துருளி ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபரின் அடையாள விவரங்களை காவல்துறையினர் தற்போது உறுதிப்படுத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், அதிக வேகமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் ஓப்பநாயக்க காவல் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை