யாழ். மாவட்டத்தில் 3,012 குடும்பங்களுக்கு இன்னும் மலசலக்கூட வசதி இல்லை – அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல்

 


யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் அடிப்படை மலசலக்கூட வசதிகளின்றி வாழ்ந்து வருவதாக, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும்போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில், சாந்தை கிராமத்தில் பல குடும்பங்கள் மலசலக்கூட வசதி இன்றி வாழ்ந்து வருவதாகவும், இது அவர்களின் சுகாதார நிலையை பாதிக்கக்கூடும் எனவும் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர், உடனடி நடவடிக்கை எடுத்து அவசியமான மலசலக்கூட வசதிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாவட்ட அளவிலான புள்ளிவிபரங்களின் அடிப்படையில், யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் சுமார் 3,012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவித்தனர்.

புதியது பழையவை