டிட்வா புயல் பாதிப்பு: கிழக்கில் 33,640 விவசாயிகள் பாதிப்பு

டிட்வா புயல் தாக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 21,272 ஹெக்டேயர் விவசாய நிலங்கள் சேதமடைந்ததுடன், அதனால் 33,640 விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எம். எஸ். றினூஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (25.12.2025) கிழக்கு மாகாணத்தில் நெற்பயிர் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அதற்காக வழங்கப்பட்ட நஷ்டஈட்டு தொகைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
மாவட்ட வாரியான பாதிப்புகளைப் பார்க்கும் போது,

  • திருகோணமலை மாவட்டத்தில் 15,389 ஹெக்டேயர் பரப்பளவிலான நிலங்களில் பயிர் செய்த 23,516 விவசாயிகள்,

  • மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,961 ஹெக்டேயர் நிலப்பரப்பைச் சேர்ந்த 5,009 விவசாயிகள்,

  • அம்பாறை மாவட்டத்தில் 2,922 ஹெக்டேயர் பரப்பளவில் பயிர்செய்த 5,115 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக சுமார் 3,190 மில்லியன் ரூபா நஷ்டஈடு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதியது பழையவை