பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் மீது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
தி இன்டிபென்டன்ட் ஊடகம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின் படி, 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தொழிற்கட்சிக்கு வாக்களித்தவர்களில் 38 சதவீதம் பேர், அடுத்த தேர்தலில் வேறொரு தலைவருக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், தொழிற்கட்சி ஆதரவாளர்கள் மத்தியில், சர் கீர் ஸ்டார்மர் தொழிற்கட்சியின் வரலாற்றில் மிக மோசமான பிரதமராக கருதப்படுவதாகவும், அதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இரண்டாவது மோசமான அரசியல் தலைவராக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்தக் கணிப்பு குறிப்பிடுகிறது.
இதற்கிடையில், கிரேட் மென்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் மக்களின் அடுத்த விருப்பத் தேர்வாக கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற தொழிற்கட்சி ஆதரவாளர்களில் 19 சதவீதம் பேர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.