பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

 


சுனாமி தினத்தை முன்னிட்டு, மூதூர் பகுதியில் உள்ள 200 மாணவர்களுக்கு மூதூர் – அல்மனால் வித்தியாலயத்தில் இன்று பாடசாலைப் பயன்பாட்டிற்கான புத்தகப் பைகள் வழங்கப்பட்டன.

இந்த புத்தகப் பைகளை பரக்கா சரிட்டி அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி எம். முஜீப் வழங்கி வைத்தார்.

சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் காரணமாக, மூதூரிலுள்ள பல மாணவர்கள் தங்களின் கற்றல் உபகரணங்களை இழந்திருந்தனர்.

அந்த நிலையை கருத்தில் கொண்டு, மூதூர் ஈராக் விளையாட்டுக் கழகத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இந்த புத்தகப் பைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை