Image Credit Samugammedia.com
கட்டைக்காடு சென் மேரிஸ் நாடக மன்றத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட “துயர் சுமந்த கரைகள்” எனும் இசை இறுவட்டு இன்று வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் ஆழிப்பேரலையின் 21-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட இந்நாளில், கட்டைக்காடு சென் மேரிஸ் சுனாமி நினைவாலயத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த இறுவட்டின் பாடல் வரிகளை யே. யெமில் எழுதியுள்ளதுடன், இசையமைப்பை மைக்கல் சார்ள்ஸ் மேற்கொண்டுள்ளார். Jmic Studioவில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இந்தப் பாடலுக்கு, யே. றெஜி, றா. விஜி, யோ. பிரியங்கா, செ. செபஸ்ரியன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.
கட்டைக்காடு பங்குத் தந்தை வசந்தன் அடிகளார் இறுவட்டை வெளியிட்டு வைத்ததுடன், ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அதன் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.