முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது

 


முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019 ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட மாகந்துரே மதுஷ் தொடர்பான விசாரணைகளின் போது மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தத் துப்பாக்கியின் தொடர் இலக்கங்களை பரிசோதித்ததில், அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட ஆயுதம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து அவர் திருப்திகரமான விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை