அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு…

 


எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அதேபோல் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிய அளவிலான மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதில் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மிதமான பலத்த மழை பதிவாகக்கூடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை காலப்பகுதிகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

புதியது பழையவை