ரிட்ஸ் கார்ல்டன் சங்கிலி'க்குச் சொந்தமான 'எவிறிமா' (Evrima) என்ற சொகுசுப் பயணக் கப்பல் நேற்று(14) சுமார் 400 பயணிகளுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கையின் சுற்றுலாத் துறை சில சவால்களை எதிர்கொண்டு வந்த நிலையில், இவ்வளவு பெரிய பயணக் கப்பல் நாட்டிற்கு வருவது சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய உற்சாகத்தை அளிக்கும் என்று சுற்றுலாத் துறையின் துணை அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.
இந்தக் கப்பல் இரண்டு நாட்கள் இலங்கையில் நங்கூரமிடும் என்பதுடன், இன்று (15) காலித் துறைமுகத்திற்குச் செல்லவுள்ளது.
இந்த வரவேற்பு நிகழ்வில் சுற்றுலாத் துறையின் துணை அமைச்சர் ருவான் ரணசிங்க, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கப்பல் பணியாளர்களுடன் அமைச்சர் நட்புறவான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், கப்பலின் ஆய்வுப் பணியிலும் பங்கேற்றார். அங்கு நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது.