இன்று சில பகுதிகளில் 50 மி.மீக்கும் மேலான மழை

 


இன்று (13) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.

இன்று அதிகாலையில் வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும்.

சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான வலுவான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுப் பிரதேசங்களிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று அவ்வப்போது வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை நேரத்தில் மூடுபனி போன்ற நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சமயங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய வேகமான காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய சேதங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

புதியது பழையவை