புதிய ஆண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு ஜனவரி 6 முதல் 9 வரை நடைபெறும்

 


2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு, ஜனவரி 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

இந்த அமர்வு வாரத்திற்கான அலுவல்கள், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் புதன்கிழமை (31) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஜனவரி 6 (செவ்வாய்க்கிழமை):

  • காலை 9.30 – 10.00 : நிலையியற் கட்டளை 22 இன் கீழ் பாராளுமன்ற அலுவல்கள்

  • 10.00 – 11.00 : வாய்மூல விடைக்கான கேள்விகள்

  • 11.00 – 11.30 : நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் கேள்விகள்

  • 11.30 – 3.30 : கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டம் மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய நலத்திட்டம் தொடர்பான ஒழுங்குவிதிகள் விவாதம்

  • 3.30 – 5.30 : பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான பிரகடனம் மீதான விவாதம்

  • 5.30 : மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான விசேட பாராளுமன்றக் குழு நியமனப் பிரேரணை சமர்ப்பிப்பு

ஜனவரி 7 (புதன்கிழமை):

  • காலை 9.30 – 10.00 : பாராளுமன்ற அலுவல்கள்

  • 10.00 – 10.30 : பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகள்

  • 10.30 – 11.00 : வாய்மூல கேள்விகள்

  • 11.00 – 11.30 : நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் கேள்விகள்

  • 11.30 – 5.00 : கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதம்

  • 5.00 : அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் அங்கீகாரம்

  • 5.00 – 5.30 : சபை ஒத்திவைப்பு நேரக் கேள்விகள்

ஜனவரி 8 (வியாழக்கிழமை):

  • காலை 9.30 – 11.30 : வழக்கமான அலுவல்கள் மற்றும் கேள்விகள்

  • 11.30 – 5.00 : மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதம்

  • 5.00 – 5.30 : அரசாங்க சபை ஒத்திவைப்பு நேரப் பிரேரணை

ஜனவரி 9 (வெள்ளிக்கிழமை):

  • காலை 9.30 – 11.30 : பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் கேள்விகள்

  • 11.30 – 3.00 : கடை மற்றும் அலுவலக ஊழியர் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி விவாதம்

  • 3.00 – 5.00 : இறக்குமதி – ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதம்

  • 5.00 – 5.30 : சபை ஒத்திவைப்பு நேரக் கேள்விகள்


புதியது பழையவை