நாடளாவிய நடவடிக்கையில் 977 பேர் கைது


முழு நாடும் ஒன்றாக’ என்ற விசேட நடவடிக்கையின் கீழ், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 977 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க 16 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 17 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் 637 கிராம், ஹெரோயின் 285 கிராம், கஞ்சா 3 கிலோ 432 கிராம் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புதியது பழையவை