ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

 


பாடசாலைகளின் நேர அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பில், ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்குள் உரிய தீர்வு அல்லது பதில் வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதனை முன்னிட்டு, ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (22) முற்பகலில் கல்வி அமைச்சில் நடைபெற்றது.

கல்வி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக முன்வைக்கப்பட்டுள்ள பாடசாலை நேர மாற்றம் குறித்தே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

டிசம்பர் 12ஆம் திகதியன்று தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அதனை மேற்கொள்ளாமல் தற்காலிகமாக ஒத்திவைத்ததாக தொழிற்சங்கங்கள் நினைவூட்டின.

இன்றைய கலந்துரையாடலில், பிரதமர் தங்களின் கருத்துக்களை ஒரு அளவு கவனத்தில் எடுத்ததாகவும், அவற்றை மேலதிகமாக பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்ததாகவும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

புதியது பழையவை