ஜன நாயகன் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது படக்குழு - ரசிகர்கள் உற்சாகத்தில்


 

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், தயாராகி வரும் பிரம்மாண்டப் படைப்பு 'ஜன நாயகன்'. இந்தத் திரைப்படம் பொங்கல் திருவிழாவில் வெளியாகிறது.

இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தால், அவர் நடிக்கும் இறுதித் திரைப்படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அண்மையில் இப்படத்தின் முதல் சிங்கிளான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது திரைப்படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், இந்தத் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு மலேசியாவில் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் முன்னோட்டத்தை திரைப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

புதியது பழையவை