டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அளிப்பதற்காக, அரசாங்கத்தின் "Rebuilding Sri Lanka" நிதிக்கு Indra Traders (Pvt) Ltd 100 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளது.
இதற்கான காசோலையை Indra Traders (Pvt) Ltd நிறுவனர்/தலைவர் இந்திரா சில்வா, இன்று (17) பிற்பகல் குடியரசுத் தலைவர் செயலகத்தில் குடியரசுத் தலைவரின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
Indra Traders (Pvt) Ltd இயக்குநர்கள் குழு உறுப்பினர்களான ருஷங்க சில்வா, ஹசீந்திர சில்வா மற்றும் பொது மேலாளர் சசினி சில்வா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
