மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி வழங்கிய மதிப்புமிக்க அன்பளிப்பு

 


அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து மேதை லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), இந்தியாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியைச் சந்தித்துப் பேசினார்.

அவர் ஜாம்நகரில் உள்ள வந்தாரா வனவிலங்கு மீட்பு மற்றும் பாதுகாப்பு மையத்தைப் பார்வையிட்டார். அப்போது அவரது கையில் இருந்த கைக்கடிகாரம் எல்லோரையும் கவர்ந்தது.

ஏனென்றால், சரணாலயத்திற்கு கைக்கடிகாரம் அணியாமல் வந்ததைப் பார்த்தவர்கள், பின்னர் அவர் கையில் விலைமதிப்பு மிக்க கைக்கடிகாரம் அணிந்திருந்ததைக் கண்டபோது, இந்த அரிய வெகுமதி தெரியவந்தது.

அந்தக் கைக்கடிகாரத்தின் பெயர் Richard Mile RM 003-V2 GMT Tourbillon ‘Asia Edition’ ஆகும். இது ஏன் ஒரு அரிய பரிசு என்றால், உலகில் வெறும் 12 மட்டுமே தயாரிக்கப்பட்ட கடிகாரம் இதுதான்.

இது ஒரு கருப்பு கார்பன் உறை மற்றும் திறந்த அமைப்புடைய டயலைக் கொண்டுள்ளது. இதன் விலை சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.10.91 கோடி ஆகும். ஆனந்த் அம்பானி இதனை மெஸ்ஸிக்குப் பரிசளித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

புதியது பழையவை