வடமாகாண சுற்றுலா பணியகமும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘அலையோடு உறவாடு’ என்ற தொனிப்பொருளில் அமைந்த உணவு திருவிழா காங்கேசன்துறை கடற்கரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (28) வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் இந்த விழா ஆரம்பமாகி, இரவு வரை பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெறவுள்ளது.
இந்த திருவிழாவின் முக்கிய அம்சங்களாக பாரம்பரிய உணவுப் பொருட்கள், உள்ளூர் உற்பத்தி பொருட்களின் விற்பனை, பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான மகிழ்ச்சியான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இன்னிசை இசை நிகழ்ச்சி ஆகியவை இடம்பெறுகின்றன.


