புத்தாண்டு தொடரில் பும்ரா விளையாடுவாரா? – நியூசிலாந்து தொடரில் ஓய்வு வழங்க வாய்ப்பு

 


இந்திய அணி 2026 ஆம் ஆண்டை நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருடன் தொடங்கவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. தொடக்க ஒருநாள் போட்டி ஜனவரி 11ஆம் திகதி வதோதராவில் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு ஜனவரி 4 அல்லது 5ஆம் திகதிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, இந்திய அணியின் முக்கிய வீரர்களான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதியது பழையவை