கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், குஷ் போதைப்பொருள் தொகையுடன் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் எடுத்துச் சென்ற பயணப் பைகளைக் கண்காணித்து சோதனை செய்தபோது, மொத்தமாக 20 கிலோ 684 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
