விஜய்யின் தனித்துவ ஆளுமையை தமிழ் சினிமா இழக்கும் – நாமல் ராஜபக்ஷ உருக்கமான வாழ்த்து

 


நடிகர் விஜயின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றதைத் தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவரை பாராட்டி உருக்கமான வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட பதிவில் தளபதி விஜய் எனக்கு எப்போதும் பிடித்தமான நடிகர்களில் ஒருவர். சினிமாவில் அவர் கடந்து வந்த பயணமும், வெள்ளித்திரையில் வெளிப்படுத்திய அவரது ஆற்றலும் மறக்க முடியாதவை.

திரைத்துறையில் இருந்து விலகி, வாழ்க்கையின் புதிய கட்டமாக அரசியல் பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ள இந்த நேரத்தில், அவரது ஆளுமையும் துடிப்பும் தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரும் இழப்பாக இருக்கும்.

அவர் எடுக்கும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தமிழக அரசியலில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கி அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அண்டை நாடான இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான நாமல் ராஜபக்ஷ வழங்கிய இந்த வாழ்த்து சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தை பெற்றுவருகிறது.

புதியது பழையவை